சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.65,700 ரொக்கம் பறிமுதல்
செய்திகள்

மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.65,700 ரொக்கம் பறிமுதல்

🕒 27 ஆக., 2026, 01:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.65,700 ரொக்கம் பறிமுதல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரில் செயல்பட்டு வரும் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அலுவலகத்தின் மூலம் மருந்து கடைகளுக்கு அனுமதி வழங்குதல், மருந்து கடைகளை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது அலுவலகத்தில் காத்திருந்த மருந்து கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.65,700 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சம் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு காரணத்திற்காக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் லஞ்சப் பரிமாற்றம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔